ஞாயிறு, மார்ச் 30, 2014

விஷவிதை தூவும் காங்கிரஸ்

 
கொலைவெறி பேச்சுக்காக கைது செய்யப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர் இம்ரான் மசூத்

மார்ச் 28-ல் சஹரான்பூர் தொகுதியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் வேட்பாளர் இம்ரான் மசூத், தனது மதவெறியை அப்பட்டமாக வெளிப்படுத்தினார். அவர் பேசியதன் சாராம்சம் இது:

“உத்தரப்பிரதேசத்தை குஜராத் போலக் கருதுகிறார் மோடி. குஜராத்தில் 4 சதவீத முஸ்லிம்கள் தான் உள்ளனர். ஆனால், உத்தரப்பிரதேசத்தில் 42 சதவீத முஸ்லிம்கள் உள்ளனர். எனவே அவர் உத்தரப்பிரதேசத்தை மற்றொரு குஜராத்தாக மாற்ற முயன்றால், அவரை துண்டு துண்டாக வெட்டிக் கூறு போட்டு விடுவேன். நான் தெருவிலிருந்து வந்தவன். நான் எதற்கும் அஞ்ச மாட்டேன்…” என்று பேசினார்...
.......................................
......................

இந்த நேரத்தில் மோடி ஆதரவாளர்களும், பாஜக கூட்டணியினரும் நிதானம் காப்பது அவசியம். ஏனெனில் அவர்கள் இன்னதென்று தெரிந்தே தான் தவறு செய்கிறார்கள். தோல்விமுனையில் இருக்கும் அவர்களுக்கு, இழப்பதற்கு எதுவும் இல்லை. மாறாக, வெற்றிச் சிகரத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மிகுந்த பொறுப்பு உள்ளது.

முழு கட்டுரையைக் காண்க: தமிழ் ஹிந்து

------------
விஜயபாரதம்
 

திங்கள், மார்ச் 24, 2014

மாற்றம் கொண்டுவரும் மாற்று அணி!

கடந்த மார்ச் 20-ம் தேதி நண்பர் ஒருவருடன் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்தேன். அப்போது எங்கள் பேச்சு தேர்தல் பக்கம் திரும்பியது. அன்று மாலை தான் தமிழகத்தில் பாஜக கூட்டணி தொகுதிப் பங்கீடு உறுதியாகி இருந்தது. அதைப் பற்றித் தான் எங்கள் பேச்சும் இருந்தது.

அப்போது பேச்சினிடையே உள்புகுந்தார் பேருந்தின் நடத்துனர்.  “என்ன, கூட்டணி உறுதியாகிவிட்டதா? பொள்ளாச்சி தொகுதி யாருக்கு?” என்றபடியே உரையாடலில் நுழைந்த அவரைக் கண்டவுடன் ஒருநொடி திணறினாலும், அவரது ஆர்வம் கண்டு அவரையும் பேச்சுத் துணைக்கு சேர்த்துக் கொண்டோம். அப்போது அவர் கூறிய சில வார்த்தைகள் நாட்டின் திசையைக் காட்டுவதாக இருந்தன. அவர் சொன்னார்:

“சார், நான் 1980-லிருந்து தேர்தலில் வாக்களிக்கிறேன். இதுவரை எனது தேர்வு திமுக அல்லது அதன் கூட்டணிக் கட்சிகள் தான். ஆனால் இந்த முறை நான் மோடிக்கு ஆதரவாக வாக்களிக்கப் போகிறேன். எனது தொகுதியில் பாஜக நின்றாலும் சரி, அதன் கூட்டணிக் கட்சி நின்றாலும் சரி, எனது வாக்கு மோடிக்குத் தான்… அவரால் மட்டுமே நாட்டை மாற்ற முடியும். மற்றவர்கள் எல்லோரும் நாட்டை ஏமாற்றவே முயல்கிறார்கள். இம்முறை பாஜக ஆட்சி தான்…”

இந்த வார்த்தைகளில் ஒரு சதவிகிதம் கூட கலப்பில்லை. மிகத் தெளிவான, ஊரகப் பகுதி மனிதர் ஒருவரின் வாக்குமூலமாக இதை உணர முடிந்தது. அதன்பிறகு, எங்கள் பேச்சு, தொகுதிப் பங்கீடுகள், வேட்பாளர்கள் தேர்வு குறித்தெல்லாம் சென்றது. நடத்துனரின் அரசியல் அறிவு அதில் பளிச்சிட்டபடியே இருந்தது.

ஒருபானை சோற்றுக்கு ஒருசோறு பதம் என்ற பழமொழியின் பொருளை அன்று நிதர்சனமாகக் கண்டேன். “பாஜக கூட்டணி காலத்தின் கட்டாயம் சார். பொன்.ராதாகிருஷ்ணன் தனது தலைமையை நிரூபித்திருக்கிறார். இந்தக் கூட்டணி குறைந்தபட்சம் 10 முதல் 15 தொகுதிகளில் வென்றே தீரும்” என்றும் கூறினார் அந்த நடத்துனர்.

TN_BJP_alliance_2014


ஒட்டுமொத்த தமிழகத்திலும் அம்மா அலை வீசுவதாக ஊடகங்கள் தீர்மானித்துவிட்ட நிலையில்தான் இந்தக் கூட்டணி அமைந்து, அனைவரையும் யோசிக்கச் செய்திருக்கிறது. ஆனால், இந்தக் கூட்டணி அவ்வளவு எளிதாக அமைந்துவிடவில்லை. இதன் பின்புலத்தில் பல மாதங்களாக விடாமுயற்சியுடன் பாடுபட்ட ஒரு குழு இருக்கிறது. இந்தக் கூட்டணியின் உருவாக்கத்தில் பாஜக தலைவர்கள் கொண்ட முனைப்பு போலவே அதன் நண்பர்கள் குழாம் மேற்கொண்ட உழைப்புக்கும் பங்கிருக்கிறது.

இந்தக் கூட்டணி ஒருமாதம் முன்னதாக அமைந்திருந்தால் இன்னமும் நன்றாக இருந்திருக்கக் கூடும். ஆனால் ஆட்டுக்கு வாலை ஆண்டவன் அளந்து தானே வைத்திருக்கிறான்? எந்த முயற்சியும் காலமும் இடமும் பொருந்தாவிடில் வெற்றிபெறாது.  பாஜகவின் தொலைநோக்கிலான கூட்டணி முயற்சி கனிந்துவர சில காலம் தேவைப்பட்டிருக்கிறது. இந்தத் தாமதத்திற்கான முழுக் காரணமும் பாஜகவையே சாரும். எவ்வாறு கூட்டணிக்கு பாஜக காரணமோ, அதேபோல அதன் தாமதத்திற்கும் பாஜக தான் காரணம்.

தேசியக் கட்சியான பாஜக மாநிலத்தில் தன்னை நன்கு வளர்த்துக் கொண்டிருந்தால், இந்தக் கூட்டணி சற்று முன்னதாகவே சாத்தியமாகி இருக்கும். ஆனால், பாஜக தமிழகத்தில் இன்னமும் வளர வேண்டியுள்ளது. இப்போதைய கூட்டணி பாஜக-வின் பிரதமர் வேட்பாளர் மோடியின் அதிவிரைவான வளர்ச்சியால் தான் சாத்தியமாகி இருக்கிறது. பாஜகவை நெருங்க விழையும் கட்சிகள் தங்களுக்கு அதனால் லாபம் என்ன என்று சிந்திப்பது இயற்கை. அதற்கான தூண்டுதலை மோடியின் பிராபல்யம் அளித்தது.

ஆனால், மாநில பாஜக-வில் பல்வேறு சிந்தனைப் போக்குகள் இருந்தன. ஒருதரப்பு திமுகவுடன் சேர்ந்தால் சிரமமின்றி 10-க்கு மேற்பட்ட தொகுதிகளில் வெல்ல முடியும் என்றது. இன்னொரு தரப்பு அதிமுகவுடன் சேர்ந்தால் அதிகபட்ச லாபம் இருக்கும் என்றது. இத்தகைய சிந்தனைப் போக்குகள் ஜனநாயக ரீயிலான ஒரு கட்சியில் இருக்கவே செய்யும். தவிர, தேசியத் தலைமையின் வழிகாட்டுதலுடன் தான் எந்த ஒரு முடிவையும் மாநிலத் தலைமை எடுத்தாக வேண்டிய நிலைமை. அவர்களோ ஆரம்பத்தில் சிரமமில்லாத கூட்டணி அமைக்க முடியுமா என்றே சிந்தித்தார்கள்.

இந்த சமயத்தில் தான் பாஜக-வின் நலம் விரும்பும் நண்பர்கள் குழு, பாஜக தமிழகத்தில் மாற்று அணியை உருவாக்க வேண்டுமென்ற கருத்தை முன்வைத்தது. அதேசமயத்தில் காந்தீய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியனும் இக்கருத்தை பொதுமேடைகளில் பேசத் துவங்கினார். பாஜக-வின் நண்பர்கள் மாநிலத் தலைவர்களுடனான் சந்திப்புகளில் மாற்று அணியின் சாத்தியக் கூறுகளை விவாதிக்கத் துவங்க, அதற்கான கரு உருவாகத் துவங்கியது கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில்.

பாஜக-வின் மாநிலத் தலைமை தேசியத் தலைமையின் ஒப்புதலுடன் திமுக, அதிமுக அல்லாத கட்சிகளின் கூட்டணிக்கு ஆயத்தமானது. தமிழருவி மணியன் பாஜக-வின் தன்னிச்சையான தூதுவராக மதிமுக, தேமுதிக, பாமக தலைவர்களைச் சந்தித்து மாற்று அணியின் அவசியம் குறித்து பேசிவந்தார். இதில் முதலில் மதிமுக-விடம் இருந்து சாதகமான பதில் வந்தது. அதன் தலைவர் வைகோ தில்லி சென்று பாஜக உயர்தலைவர்களை நேரில் சந்தித்து, தமிழகத்தில் புதிய கூட்டணிக்கு அச்சாரமிட்டார்.

ஆனால், தேமுதிக, பாமக-வை சம்மதிக்க வைப்பது அவ்வளவு எளிதாக இல்லை. காங்கிரஸ் கட்சியின் ஆசைகாட்டுதல்கள், அன்பான எச்சரிக்கைகள், தனிப்பட்ட தொடர்புகளால், பாஜக பக்கம் இவ்விரு கட்சிகளும் நெருங்கத் தாமதம் ஆனது. மறுபுறம் திமுக-வும் தேமுதிக-வுக்கு வலைவீசி வந்தது. தேர்தல் அரசியல் பலகோடிகள் புரளும் வியாபாரமாகிவிட்ட சூழலில், கூட்டணி அரசியல் சார்ந்த முடிவுகளை எடுப்பது அவ்வளவு எளிதானதல்ல. தவிர, தேமுதிக, பாமக இரு கட்சிகளும் மாநிலத்தின் பல பகுதிகளில் சமபலத்துடன் உள்ள கட்சிகள். பாமக தலைவர் ராமதாஸ்- தேமுதிக தலைவர் விஜயகாந்த் இருவருக்கும் நல்லுறவும் இல்லை. இந்தச் சூழலில் அவர்களை ஒரே அணியில் இணைக்கும் முயற்சி சவாலானதாக இருந்தது.

ஆனால். பாமக தலைவரின் மகன் அன்புபுமணியும், தேமுதிக தலைவரின் மனைவி பிரேமலதாவும் தமிழக அரசியல் நிதர்சனத்தையும் பாஜக-வுடன் சேர்வதன் அவசியத்தையும் உணர்ந்திருந்தனர். அதனால் தான் ஆறு மாதம் பாடுபட்டதற்கு மார்ச் 20-ல் பலன் கிடைத்தது. தனித்தமிழ் உணர்வாளர்கள் மிகுந்த மதிமுக-வும் பாமக-வும் பாஜக பக்கம் வருவதற்கு, அக்கட்சிகளின் முந்தைய கூட்டணி அனுபவமும் ஒரு காரணம். வாஜ்பாய் தலைமையில் தே.ஜ. கூட்டணி ஆட்சி நடந்தபோது (1998- 2004) இக்கட்சிகளுக்கு அளிக்கப்பட்ட மரியாதையும், இப்போதும் பாஜக தலைவர்கள் காட்டிய பெருந்தன்மையும் அவர்களை இயல்பாக தோழமைக் கட்சிகளாக்கின.

பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். பல்வேறு ஜாதி சமுதாயங்களிடையே இணக்கத்தை ஏற்படுத்த நடத்திய சமூக நல்லிணக்க மாநாடுகளில் பங்கேற்ற பல அரசியல் தலைவர்கள் ஏற்கனவே பாஜக-வின் தொடர்பு எல்லைக்குள் வந்திருந்தார்கள். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் ஈஸ்வரன், புதிய நீதிக் கட்சியின் ஏ.சி.சண்முகம், பாமக-வின் இரண்டாம் நிலைத் தலைவர்கள் போன்ற பலரது தொடர்பு இப்போது கூட்டணி அமைய உதவியது. பல்வேறு கட்சித் தலைவர்களுடனான தனிப்பட்ட நட்புறவைக் கொண்டிருந்த பாஜக நண்பர்களின் உதவியும் இதற்கு மிகவும் பயன்பட்டது. சுதேசி இயக்கத் தலைவர்கள் ஆடிட்டர் எஸ்.குருமூர்த்தி, பேராசிரியர் ப.கனகசபாபதி, ஆர்.எஸ்.எஸ் மாநிலத் தலைவர் ஆர்.வி.எஸ்.மாரிமுத்து போன்ற பலரது தனிப்பட்ட முயற்சிகளுக்கு கூட்டணியின் உருவாக்கத்தில் பெரும் பங்குண்டு.

இந்தச் செயல்திட்டத்தை நிறைவேற்ற பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், முன்னாள் தலைவர்கள் இல.கணேசன், கே.என்.லட்சுமணன் உள்ளிட்ட மாநிலத் தலைவர்கள் குழு விடாமுயற்சியுடன் பாடுபட்டது. கூட்டணிக்கு வரச் சம்மதிக்கும் ஒவ்வொரு கட்சியின் சந்தேகங்களுக்கும் பதில் அளித்து, அவர்களின் நம்பிக்கையை இழக்காமல், அதேசமயம் அவர்களது நிர்பந்தங்களையும் புரிந்துகொண்டு நிதானமாக பாஜக குழு இயங்கியது. அதன் பலன் அழகிய  கூட்டணியாக இப்போது மலர்ந்திருக்கிறது. இதனை வெற்றிக் கூட்டணியாக்குவது இனிவரும் நாட்களில் கூட்டணித் தோழர்களின் உழைப்பில் தான் உள்ளது.

PonAarகூட்டணியில் இணைவது என்று மதிமுக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் முடிவெடுத்துவிட்டாலும், எந்த கட்சிக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பது என்ற கேள்வி அடுத்த சிக்கலை ஏற்படுத்தியது. தற்போது அதிக எண்ணிக்கையில் சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள கட்சி என்ற முறையிலும், மக்களிடையே உள்ள விஜயகாந்துக்கு உள்ள தனிப்பட்ட செல்வாக்கின் அடிப்படையிலும், தேமுதிக-வுக்கு 14 தொகுதிகள் என்று முடிவானது.

அடுத்து ஏற்கனவே சமுதாய அமைக்களை ஒருக்கிணைத்து இயங்கிவந்த பாமக-வுக்கு தொகுதிகளை ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டது. தேமுதிக-வுக்கு அளித்த அதே எண்ணிக்கையில் தனக்கும் தொகுதிகள் வேண்டும் என்றது பாமக. இந்தக் கோரிக்கையால் கூட்டணி பேச்சுவார்த்தை இழுபறியானது. கூட்டணியின் சாதக பாதகங்களை விளக்கி, இறுதியில் பாமக-வுக்கு 8 தொகுதிகள் என்ற முடிவுக்கு ஒருவாறாக சம்மதம் பெறப்பட்டது.

பாஜக-வின் இயல்பான நண்பராக இருந்த வைகோ, அரசியல் சூழலின் கட்டாயங்களை உணர்ந்து எந்த கெடுபிடியும் இன்றி 7 தொகுதிகளுக்கு ஒப்புக் கொண்டார். கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, பார்வேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சி, புதுவை ரங்கசாமியின் என்.ஆர்.காங்கிரஸ் ஆகியவை தலா ஒரு தொகுதிக்கு சம்மதித்தன. மீதமிருந்த (தமிழகம் மற்றும் புதுவை) 8 தொகுதிகளில் பாஜக போட்டியிடத் தீர்மானித்தது.
ஆக, திமுக கூட்டணி, அதிமுக கூட்டணிக்கு சவால் விடும் வகையில் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி உருவாகிவிட்டது. இக்கூட்டணியின் தலைவர்களான வைகோ, விஜயகாந்த், ராமதாஸ் ஆகியோர் மாநிலம் அறிந்த தலைவர்கள். இவர்களது மோடிக்கு ஆதரவான பிரசாரம் பாஜக கூட்டணிக்கு மிகவும் தெம்பூட்டுவதாக அமைந்திருக்கிறது.

தொகுதிகளின் எண்னிக்கை இறுதி செய்யப்பட்டாலும், எந்தக் கட்சிக்கு எந்தத் தொகுதி என்பதைத் தீர்மானிப்பது அடுத்த சவாலாக இருந்தது. கூட்டணியின் லாபத்தைப் பெறுவதிலும், தனது இருப்பை உறுதிப்படுத்துவதிலும் எந்த ஒரு கூட்டணிக் கட்சியும் முனைவது இயற்கையே. இதில் ஒவ்வொரு கட்சியும் சில தொகுதிகளை விட்டுக் கொடுத்து இறுதியில் சமரசம் கண்டன. ஊடகங்களின் ஏளனமான விமர்சனங்களையும் நையாண்டிகளையும் தாண்டி, பொறுமையுடன் தொகுதிப் பங்கீட்டை நிறைவு செய்திருக்கிறது பாஜக. இப்போது தமிழகத்தின் இருபெரும் அரசியல் கட்சிகளும் பாஜக தலைமையிலான கூட்டணியால் அதிர்ந்து போயிருப்பதாகத் தகவல்.
தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் தொகுதிப் பங்கீட்டு விவரம்:

தேமுதிக-14 : திருவள்ளூர், வட சென்னை, மத்திய சென்னை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், கடலூர், கரூர், திருப்பூர், திண்டுக்கல், திருச்சி, மதுரை, திருநெல்வேலி.
பாஜக-8 : தென் சென்னை, வேலூர், நீலகிரி, கோவை, தஞ்சாவூர், சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி.
பாமக-8 : அரக்கோணம், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஆரணி, திருவண்ணாமலை, சிதம்பரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம்.
மதிமுக-7 : காஞ்சிபுரம், ஈரோடு, தேனி, விருதுநகர், பெரும்புதூர், தென்காசி, தூத்துக்குடி
இஜக-1: பெரம்பலூர்.
கொமதேக-1 : பொள்ளாச்சி.
தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, இந்திய ஜனநாயக கட்சி நிறுவனத் தலைவர் பாரிவேந்தர், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈஸ்வரன் ஆகியோருடன் இணைந்து செய்தியாளர்களை சென்னையில் சந்தித்த பாஜக தேசிய தலைவர் ராஜ்நாத் சிங் இந்தத் தொகுதிப் பங்கீட்டை மார்ச் 20-ல் அறிவித்தார்.

இதில் இந்திய ஜனநாயகக் கட்சியும் கொமதேக-வும் பாஜக-வின் தாமரை சின்னத்திலேயே போட்டியிட உள்ளன. தேர்தலில் போட்டியிடும் இக்கட்சிகள் மட்டுமல்லாது, புதிய நீதிக் கட்சி, வல்லரசுவின் ஃபார்வர்டு பிளாக், தேசிய முஸ்லிம் முன்னேற்றக் கழகம், புதிய மார்க்சிஸ்ட் கட்சி, இந்து மக்கள் கட்சி போன்ற பல சிறு கட்சிகளும் இந்தக் கூட்டணியை ஆதரிப்பதாக அறிவித்துள்ளன.

இக்கூட்டணியை சென்னையில் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் அறிவித்தபோது,  காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கூட்டாட்சித் தத்துவத்தை மதிக்கவில்லை என்று குற்றம்சாட்டினார். விலைவாசி உயர்வு,  ஊழல் உள்ளிட்ட பிரச்னைகளால் மத்திய அரசின் மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் இதற்கு பாஜகவின் மோடியே மாற்று என்றும் அவர் குறிப்பிட்டார்.

‘பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றால், தமிழக மீனவர் பிரச்னைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்; இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு நல்ல தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றும் அவர் உறுதி அளித்தார். தமிழகத்தில் கூட்டணியை உறுதிசெய்வதில் முக்கிய பங்காற்றிய தமிழருவி மணியனுக்கு அவர் நன்றி தெரிவித்தார்.

மொத்தத்தில், தமிழகத்தில் இணக்கமான ஓர் அற்புதக் கூட்டணி இரு பிரதான திராவிடக் கட்சிகளுக்கும் மாற்றாக உருவாகிவிட்டது. நரேந்திர மோடி என்ற பிரதமர் வேட்பாளரை முன்னிறுத்தி, வைகோ, விஜயகாந்த், ராமதாஸ் போன்ற மாநிலத் தலைவர்களின் ஏகோபித்த ஆதரவுடன், பாஜக புதிய களத்தில் போராடத் துவங்கியிருக்கிறது.

வெற்றி- தோல்விகள் அனைவருக்கும் பொதுவானவை. ஆனால், மகத்தான மாற்றங்களுக்கு முயற்சிப்பதே ஒரு பெரும் சாகசம். அந்த சாகசத்தில் தமிழக பாஜக வெற்றி பெற்றிருக்கிறது. தமிழகத்தில் உருவாகியுள்ள இந்தக் கூட்டணி தேசிய அளவிலும் பாஜக-வுக்கு மிகுந்த தெம்பூட்டுவதாக அமைந்துள்ளது.

இதன் அடுத்தகட்டமாக, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் செயல்திட்டங்களை தமிழக மக்களிடையே கொண்டுசேர்த்து, கூட்டணித் தோழர்களுடன் இணைந்து பாடுபட்டு, வெற்றிகளை பாஜக அறுவடை செய்ய வேண்டும். பாஜக-வின் கூட்டணித் தோழர்களும் அதிக இடங்களில் வெல்ல வேண்டும். மாற்றத்திற்கான வாய்ப்பை தமிழக மக்களுக்கு பாஜக வழங்கிவிட்டது. இந்த மாற்றத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு இனி தமிழக மக்களிடமே உள்ளது.


கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கு
தொண்டர்கள் பாடுபட வேண்டும்: விஜயகாந்த்
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மார்ச் 21-ல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:
இந்தியாவை ஒரு வல்லரசு நாடாகவும், பொருளாதாரத்தில் வளர்ச்சி பெற்ற நாடாகவும், தனிநபர் வருமானத்தில் தன்னிறைவு பெற்ற நாடாகவும் உருவாக்க வேண்டும் என்ற கனவு ஒவ்வொரு இந்தியனுக்கும் உண்டு. இந்தியாவின் வளர்ச்சியைத் தடுப்பதில் பெரும் பங்கு வகிப்பது ஊழல் என்பதை நாம் அனைவரும் அறிந்துள்ளோம்.
இந்தியாவில் ஊழலற்ற ஆட்சியை ஏற்படுத்திடும் வகையில், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் ஊழல் எதிர்ப்பு மாநாட்டை நடத்தினோம். ஒன்றுபடுவோம், ஊழலை ஒழிப்போம் என்ற புதிய புரட்சி முழக்கத்தின் மூலம் ஊழலுக்கு எதிராக மக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி தமிழகத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்திடும் வகையில் மாநாட்டை நடத்தினோம்.
தமிழகத்தில் ஊழலுக்குப் பெயர்போன அ.தி.மு.க, தி.மு.க, காங்கிரஸிற்கு மாற்றாக புதியதொரு அணியை உருவாக்கிடும் முயற்சியின் விளைவுதான் தேசிய ஜனநாயக கூட்டணியாகும். இக்கூட்டணியில் இந்திய அளவில் பல்வேறு கட்சிகள் அங்கம் வகித்தாலும், தமிழ்நாட்டில் தேசிய முற்போக்கு திராவிட கழகம், பாரதீய ஜனதா கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட பல இயக்கங்கள் இக்கூட்டணியில் இணைந்துள்ளன. பல இயக்கங்கள் தங்களின் ஆதரவை தெரிவித்துள்ளன. இது மக்கள் கூட்டணி, தமிழகத்தின் முதல் கூட்டணி, வெற்றிக் கூட்டணி, தேசிய ஜனநாயகக் கூட்டணியாகும்.
நாட்டில் ஏழை மக்களின் வறுமைக்கும், அவர்களின் வாழ்வாதார பிரச்னைகளுக்கும் லஞ்சமும், ஊழலும்தான் பெரிதும் காரணமாக உள்ளது. மத்திய, மாநில அரசுகள் மக்களுக்கான திட்டங்களை முறையாக தீட்டி, லஞ்சம், ஊழல் இல்லாத வகையில் நிறைவேற்றி இருந்தால் இந்திய நாடு எல்லாத் துறைகளிலும் முன்னேற்றம் அடைந்திருக்கும். ஆனால் இன்றைய நிலையோ முற்றிலும் நேர்மாறாக உள்ளது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆட்சி அமைந்திட வேண்டும். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் பணியாற்றி கொண்டிருக்கும் நரேந்திர மோடி தலைமையில் இந்திய அரசு அமைய வேண்டும். அது இந்தியாவை கட்டாயம் வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் என்கின்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.
எனவே, தேசிய முற்போக்கு திராவிட கழகம் பாரதீய ஜனதா கட்சியுடன் உடன்பாடு கொண்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. இக்கூட்டணியில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் மட்டுமல்ல, தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் நமது கூட்டணியின் சார்பில் போட்டியிடுகின்ற தேமுதிக மற்றும் தோழமைக் கட்சிகளின் அனைத்து வேட்பாளர்களின் வெற்றிக்கும் தேமுதிகவின் நிர்வாகிகளும், தொண்டர்களும் கடுமையாக பாடுபட வேண்டும்.

அவரவர் சார்ந்துள்ள பாராளுமன்ற தொகுதிக்கு உள்பட்ட இடங்களில் தேர்தல் பணியாற்ற வேண்டும். தேமுதிகவின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள கழக வேட்பாளர்கள் மற்றும் தோழமைக் கட்சிகளின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர்கள் ஆகியோரின் வெற்றிக்காக நீங்கள் அனைவரும் அரும்பாடுபட வேண்டும்.

தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற வேண்டும். இந்திய நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி அவர்கள் வரவேண்டும் என்கின்ற நமது குறிக்கோளோடு, சுய விருப்பு, வெறுப்பு இன்றி இரவு, பகலென பாராமல் நீங்கள் அனைவரும் சிறப்பாக தேர்தல் பணியாற்றி 40 தொகுதிகளிலும் நம் கூட்டணியை மாபெரும் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

மேலும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றிருக்கின்ற தோழமைக் கட்சியினர் அனைவரும் எந்த நோக்கத்திற்காக நாம் ஒன்றிணைந்து இருக்கிறோமோ, அதை நிறைவேற்றும் வகையில் வெற்றியை மட்டுமே நமது குறிக்கோளாகக் கொண்டு நாம் அனைவரும் ஒற்றுமையாக பாடுபட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

இந்தக் கூட்டணியின் லட்சியமே இந்தியாவை வல்லரசாக்கவும், தமிழ்நாட்டை நல்லரசாக்கவும், அனைவரும் ஒன்றுபடுவோம், ஊழலை ஒழிப்போம், மகத்தான வெற்றி காண்போம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


வாக்குகள் சிதறாமல் தவிர்க்கவே கூட்டணி- அன்புமணி

அதிமுகவுக்கு எதிரான வாக்குகள் சிதறாமல் தடுப்பதற்காகவே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்திருப்பதாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

சென்னையில் தே.ஜ.கூட்டணி அறிவிப்புக் கூட்ட்த்தில்  பங்கேற்ற அன்புமணி செய்தியாளர்களிடம் கூறியது:

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தவும், மீனவர் பிரச்னை, இலங்கைத் தமிழர் பிரச்னை ஆகியவற்றுக்குத் தீர்வு காணவும் பாஜக உறுதி அளித்துள்ளது. அதனால் தான் பாஜகவை ஆதரிக்கிறோம்.
மாறி மாறி ஆட்சி செய்யும் அதிமுக,  திமுக காரணமாக தமிழகம் மோசமான நிலையை அடைந்துள்ளது. இரு திராவிடக் கட்சிகளால் தமிழகம் சீரழிந்துள்ளது. இந்த நிலை மாற வேண்டும். பாமக தனித்துப் போட்டியிட்டால் ஆளும் அதிமுகவுக்கு எதிரான வாக்குகள் சிதறும். இதனைத் தடுப்பதற்காகவே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ளோம் என்றார் அன்புமணி.

இந்திய ஜனநாயகக் கட்சியின் தலைவர் பச்சமுத்து (எ) பாரிவேந்தர் இந்தக் கூட்டணி குறித்துக் கூறுகையில்,  “மோடியின் பொருளாதாரக் கொள்கையால் இந்தியா முன்னேற்றம் அடையும். மேலும், அவர் தலைமையில் லஞ்சம், ஊழல் இல்லாத ஒரு நல்லரசு அமையும். என்னுடைய பார்வையில் தமிழகத்தைப் பொருத்தவரை பா.ஜனதா கூட்டணி சமஅளவு சக்தி வாய்ந்ததாக இருக்கும். நாங்கள் கொள்கை அளவில் பா.ஜனதா கட்சியுடன் ஒத்துப்போகிறோம்” என்றார்.

கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூட்டணி குறித்துக் கூறுகையில், “பா.ஜ.க. பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை இந்தியாவின் பிரதமராக்கி,  நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக பாஜக கூட்டணியுடன் இணைந்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தேர்தலைச் சந்திக்கிறது. தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணியே முதன்மையான கூட்டணி. வருகிற மக்களவைத் தேர்தலில் இந்தக் கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெறும். எந்தவித நிபந்தனை விதிக்காமல் கூட்டணியில் இணைந்துள்ளோம்” என்றார்.



நாற்பது இடங்களிலும் வெல்ல வேண்டும்- வைகோ
மத்தியில் பெரும்பான்மை பெற்று பாஜக ஆட்சி அமைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,  மாநிலத்தில் 40 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெல்ல வேண்டும் என்று தெரிவித்தார்.
மதிமுக தேர்தல் அறிக்கையை மார்ச் 22-ல் சென்னையில் வெளியிட்ட வைகோ  செய்தியாளர்களிடம்  கூறியது:
“நாடு முழுவதும் மோடி அலை வீசுகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை பெற்று, மத்தியில் ஆட்சி அமைக்கும். தமிழகத்தில் அனைத்துத் தரப்பினரிடமும் பேசி, மிகப் பெரிய அணியாக இந்தக் கூட்டணி உடன்பாடு வருவதற்கு பாடுபட்டவர் தமிழருவி மணியன். அவருக்கு நன்றி.
பாஜக, தேமுதிக, பாமக ஆகியவை இந்தக் கூட்டணியில் இணைய வேண்டும் என்று முதலிலேயே நான் விருப்பம் தெரிவித்தேன். மோடி அலை வீசும் நேரத்தில், தமிழகத்தில் இந்த அணி வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அணி அமைய விரும்பினேன். அப்படிப்பட்ட அணி இப்போது அமைந்துவிட்டது.
வரும் மக்களவைத் தேர்தலில் எப்படியும் மற்ற மாநிலங்களிலேயே பாஜக அதிக வெற்றி பெற்று, பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்து விடும். அதேநேரத்தில், தமிழகத்திலும் பாஜக கூட்டணி 40 தொகுதிகளிலும் வென்றால் தான், தமிழகத்துக்கு உரிய பலன் கிடைக்கும்.

இந்தக் கூட்டணியில் உள்ள ஒவ்வொரு கட்சிக்கும் தனித்த கொள்கைகள் உள்ளன. அவற்றை விட்டுக் கொடுக்கவும் தேவையில்லை; பிறர் மீது திணிக்கவும் தேவையில்லை. நாங்கள் நாட்டுநலன் என்ற அடிப்படையில் ஒருங்கிணைந்து செயல்படுவோம் என்றார் வைகோ.


பா.ஜனதா கூட்டணி உருவானது எப்படி?
மனம் திறக்கிறார் பொன். ராதாகிருஷ்ணன்.

தமிழக அரசியல் களத்தில் ஒரு புதிய கூட்டணிக் காட்சி அரங்கேறி இருக்கிறது… பொறுமையை இழக்காமல் விடாமுயற்சியுடன் இந்தக் கூட்டணியை உருவாக்கி சாதித்தவர் பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன். கடுமையான இழுபறி, கட்சித் தலைவர்களின் பிடிவாதங்களுக்கு இடையே கூட்டணியை உருவாக்கியது எப்படி?  என்று கேட்டபோது அவர் மனம் திறந்து கூறியதாவது:

தமிழகத்தைப் பொருத்த வரை பாஜக ஏதாவது ஒரு கட்சியுடன் சேர்ந்து சாதாரணமாக பத்தோடு பதினொன்றாக இருந்துவந்த நிலைதான் இருந்தது. ஆனால் நாடு முழுவதும் உருவாகி இருக்கும் மோடி அலையால் தமிழகத்திலும் ஒரு வலுவான கூட்டணியை உருவாக்க முடியுமா? என்று ஆலோசியுங்கள் என்று கட்சி மேலிடம் எங்களுக்கு கட்டளையிட்டது. அப்போது எங்களுடன் இந்திய ஜனநாயக கட்சி மட்டும் தான் இருந்தது.

கூட்டணிக்கு அச்சாரம் போடும் முயற்சியில் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் ஈடுபட்டார். பத்திரிகை மற்றும் கட்சித் தலைவர்களை நேரடியாகத் தொடர்பு கொண்டு அவர் ஆற்றிய பணிகள் கணக்கிட முடியாதது. அவருக்குத் தான் முதலில் நன்றி தெரிவிக்க வேண்டும்.

கடந்த டிசம்பர் மாதம் கூட்டணி பேச்சுக்களைத் தொடங்கினோம். முதலில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவைச் சந்தித்தோம். அடுத்தடுத்து தேமுதிக தலைவர் விஜயகாந்த், பாமக தலைவர்கள், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன் ஆகியோரைச் சந்தித்தோம்.

இப்போதைய அரசியல் சூழ்நிலையில் மோடி பிரதமராக வரவேண்டும். பாஜக-வுடன் கூட்டணி அமைக்க வேண்டும். இதுவே வெற்றிக் கூட்டணியாக அமையும் என்ற உணர்வு எல்லாத் தலைவர்களிடமும் இருந்ததை உணர்ந்தோம். அது எங்கள் கூட்டணி முயற்சிக்கு உற்சாகத்தை அளித்தது.

ஜனவரி–1 புத்தாண்டு தினத்தில்  ‘மோடி பிரதமர் ஆக வேண்டும்; மதிமுக தேசிய ஜனநாயக கூட்டணியில் பங்கேற்கும்’ என்ற அறிவிப்பை முதலில் வைகோ வெளியிட்டார்.

அன்றே விஜயகாந்தையும் சந்தித்தோம். அப்போது அவர்,  ‘உங்கள் கூட்டணிக்கு வருகிறேன். ஆனால் கூட்டணி அமைக்க இன்னும் கால அவகாசம் இருக்கிறதே’ என்றார்.

அதை தொடர்ந்து பாமக-வுடன் பேசினோம். கூடுதல் தொகுதி வேண்டும்; வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் வேண்டும் என்பது எல்லா கட்சிகளும் எதிர்பார்ப்பதுதான். அதே மனநிலையில் தான் எல்லா கட்சிகளும் இருந்தன. அதனால் தொகுதி பங்கீட்டில் சிக்கல் ஏற்பட்டது உண்மை தான்.

ஆனால் எங்களுக்கு நம்பிக்கை இருந்தது. நாட்டு மக்கள் விரும்பும் ஒரே தலைவர் நரேந்திர மோடி. விழுப்புரத்தில் விஜயகாந்தும் ஊழல் எதிர்ப்பு மாநாட்டை நடத்தினார். எனவே எந்தக் கட்சியும் இந்தக் கூட்டணியை விட்டுப் போகாது என்ற நம்பிக்கை உறுதியானது.
இந்தக் கட்சிகளை ஒருங்கிணைக்க பொறுமை தான் அவசியம் என்பதை உணர்ந்தேன். 1998 முதல் 4  தேர்தல்களில் மற்ற கட்சிகளிடம் சென்று ‘சீட்’ கேட்டோம். அந்த அனுபவம் வேறு; இப்போதைய அனுபவம் முற்றிலும் மாறுபட்ட புதிய அனுபவமாக இருந்தது. இப்போது நாங்கள் பகிர்ந்து கொடுக்கும் நிலையில் இருந்தோம். இது சாதாரண விஷயமல்ல. மிகவும் கடினமான அனுபவம் இது.

ஒவ்வொரு நாளும் பேசும்போது ஒவ்வொரு விதமான சூழ்நிலையைச் சந்திப்போம். நாங்கள் ஒருகோணத்தில் பேசும்போது இன்னொரு கோணத்தில் புது பிரச்னை வரும். அப்போதெல்லாம் விரக்தி வருவது இயல்பு தான்.

ஆனால், தற்போதைய சூழ்நிலை, கட்சிகளின் சூழல், மனநிலை, எதிர்பார்ப்பு, இலக்குகள் எல்லாமே எங்களுக்குத் தெரியும். மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள். மக்களின் உணர்வுகளுக்கு ஏற்ப அந்த மாற்றத்தைக் கொடுக்க கட்சிகளும் தயாராக இருப்பதை உணர்ந்தோம். எனவே மோடிக்கு ஆதரவாக இருக்கும் கட்சிகள் சிதறிவிடக் கூடாது என்பதில் கவனமாகச் செயல்பட்டோம்.

பாஜக-வைப் பொருத்த வரை நானும் ஒரு சாதாரண தொண்டன் தான். வெற்றி வாய்ப்புள்ள சில தொகுதிகள் எங்களுக்குக் கிடைக்கவில்லையே என்ற எண்ணம் எனக்கும் உண்டு.
ஒரு கூட்டுக் குடும்பத்தில் குழந்தைகளுக்கு உணவு பரிமாறும் தாய் முதலில் தனக்கு எடுத்து வைத்துவிட்டு குழந்தைக்குப் பரிமாற மாட்டாள். கிட்டத்தட்ட அதே நிலைதான் பாஜக-வுக்கும். அதே நேரத்தில் எல்லோரையும் திருப்திப்படுத்த வேண்டும் என்ற பொறுப்பு எங்களுக்கு. அந்தப் பொறுப்பை எல்லோரது ஒத்துழைப்புடனும் வெற்றிகரமாக நிறைவேற்றி இருக்கிறோம்.

எல்லாத் தொகுதிகளிலும் மோடி நிற்பதாகவே நாங்கள் கருதுகிறோம். எங்கள் மீதான அவதூறுகளை மக்கள் தவிடு பொடியாக்குவார்கள்.
தமிழகத்தைப் பொருத்த வரை பாஜக வேகமாக வளர்ந்துவரும் கட்சி. எங்கள் தொலைநோக்குப் பார்வை கட்சியை இன்னும் வலுப்படுத்துவது. இப்போதைக்கு பாஜக ஜெயிப்பது, அதற்கு ஆதரவான கூட்டணி கட்சிகள் ஜெயிப்பது என்பது எங்கள் முதல்வேலை. மோடி வெற்றி பெற்ற மறு நிமிடமே எங்கள் தொலைநோக்கு செயல்திட்டம் தொடங்கும். அடுத்த ஓர் ஆண்டில் தமிழகத்தில் பாஜக மிகப்பெரிய சக்தியாக மாறும்.

இவ்வாறு அவர் கூறினார்.
நன்றி: மாலை மலர்

-------------------
விஜயபாரதம் 

காண்க: தமிழ் ஹிந்த
 

சனி, மார்ச் 22, 2014

நாடு முழுவதிலும் மோடி புயல்


தமிழக  தே.ஜ.கூட்டணி அறிவிப்பு கூட்டத்தில்...
தமிழக தே.ஜ.கூட்டணி அறிவிப்புக் கூட்டத்தில்…

16 வது லோக்சபா தேர்தல் நெருங்க நெருங்க, மோடி புயலின் வேகம் அதிகரிப்பது க்ண்கூடாகவே தெரிகிறது, மார்ச் 14-ம் தேதி வெளியான என்.டி.டி.வி.கருத்துக் கணிப்பின்படி, அவர்கள் ஆய்வு செய்த 319 தொகுதிகளில் 166 தொகுதிகளை வெல்லும் நிலையில் தே..கூட்டணி உள்ளது தெரியவருகிறது. இதில் பாஜக மட்டுமே 146 இடங்களில் வெல்லும் என்று கணிக்கப்படுகிறது. (இக்கருத்துக் கணிப்பு தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி உருவாகும் முன்னர் எடுக்கப்பட்டது. தமிழகத்திற்கு இக்கணிப்பு பொருந்தாது) 

அதாவது தே..கூட்டணியின் வெற்றி வாய்ப்பு சதவிகிதம் 60 சதவிகிதத்தையும் தாண்டியுள்ளது. இதே நிலை தேர்தல் வரை நீடித்தால் பாஜக தலைமையிலான கூட்டணி 300-க்கு மேற்பட்ட இடங்களில் வெல்லும் என்பது உறுதி.


பாஜகவுக்கு சாதகமான காற்று வீசுவதற்குச் சான்றாக, பல மாநிலங்களிலும் பாஜகவின் கூட்டணிக் கட்சிகள் அதிகரித்து வருகின்றன. தமிழகத்தில் ஒருகாலத்தில் தீண்டத் தகாத கட்சியாகக் கருதப்பட்ட பாஜக, இப்போது திமுக- அதிமுக கூட்டணிகளுக்கு நிகராக பெரிய கூட்டணியை உருவாக்கி இருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது

மார்ச் 20-ம் தேதி சென்னையில் நடைபெற்ற தே.ஜ.கூட்டணி தொகுதிப் பங்கீட்டு அறிவிப்பு விழாவில்,  ‘கேப்டன்’ விஜயகாந்த், மருத்துவர் அன்புமணி ராமதாஸ், வைகோ, கொங்கு ஈஸ்வரன் உள்ளிட்ட தலைவர்கள் ஒரே மேடையில் அமர்ந்து ஊடகங்களின் ஹேஸ்யங்களை முறியடித்தபோது மோடி புயலின் விளைவை உணர முடிந்தது. இதைவிட பல அரிய அரசியல் நிகழ்வுகளை நாடு முழுவதும் காண முடிகிறது

தலித் தலைவர் உதித்ராஜின் வருகை
தலித் தலைவர் உதித்ராஜின் வருகை

குறிப்பாக, பீகாரில் லோக்ஜனசக்தி கட்சியின் ராம்விலாஸ் பஸ்வான் தே..கூட்டணியில் சேர்ந்தது பெரும் அரசியல் திசைமாற்றத்தை வெளிப்படுத்தியது. 2003-ல் பாஜக கூட்டணியில் இருந்து விலகிக் சென்ற இவரது மீள் வருகை, தலித் மக்களின் ஆதரவு பாஜகவுக்கு பெருக வழிவகுத்துள்ளது. இதேபோல, மகாராஷ்டிராவில் இந்திய குடியரசுக் கட்சியின் ராம்தாஸ் அதவாலே, .பி.யில் தலித் தலைவர் உதித்ராஜ் ஆகியோரின் வருகை பாஜகவின் பலத்தை அதிகரித்துள்ளது. பீகார் மாநிலத்தில் ராஷ்ட்ரீய லோக் சமதா கட்சியும் பாஜக அணியில் சேர்ந்துள்ளது.

மகராஷ்டிராவில் ராஷ்ட்ரீய சமாஜ் பக்ஷா, சுவாபிமானி பக்ஷா ஆகிய கட்சிகளும் பாஜக கூட்டணியில் இணைந்துள்ளன. ஏற்கனவே இங்கு சிவசேனை வலுவான தோழமைக் கட்சியாக உள்ளது. போதாக்குறைக்கு, சிவசேனாவில் இருந்து பிரிந்து மகராஷ்டிர நவநிர்மான் சேனாவை நிறுவிய ராஜ்தாக்கரே, மோடி பிரதமராவதற்கு தனது கட்சி உதவும் என்று அறிவித்துள்ளார். பாஜக போட்டியிடும் பல தொகுதிகளில் தான் போட்டியிடப் போவதில்லை என்றும் அக்கட்சி அறிவித்துள்ளது.

பாஜக ஆளும் கோவாவில், மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி ஏற்கனவே கூட்டாளியாக உள்ளது. இங்கு மனோகர் பாரிக்கர் தலைமையிலான பாஜக அரசு மீதான நல்லெண்ணமும் பாஜகவின் வெற்றிக்கு உதவும்.

தெலுங்கானா பிரச்னையால் காங்கிரஸ் கட்சி நிலைகுலைந்துள்ள ஆந்திரப் பிரதேசத்திலும் தே..கூட்டணி நல்ல நிலையில் உள்ளது. இங்கு பாஜகவுடன் கூட்டணி அமைக்க சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசமும், ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரசும் போட்டி போட்டன. இறுதியில் தெலுங்குதேசம் கூட்டணியில் ஐக்கியமாக உள்ளது. இக்கட்சி ஏற்கனவே வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது தோழமைக் கட்சியாக இருந்தது. அதேபோல, தெலுங்கானா பகுதியில், தனி மாநிலத்திற்காகப் போராடிய தெலுங்கானா ராஷ்டிர சமிதியின் சந்திரசேகர ராவ் மோடி அணியில் இணையப் போவதாகத் தகவல். தவிர, சீமாந்திராவில், நடிகர் சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யாண் துவங்கியுள்ள ஜனசேனா கட்சியும், ஜெயபிரகாஷ் நாராயணனின் லோக் சதா கட்சியும் கூட தே.ஜ.கூட்டணியில் சேர உள்ளன. மொத்தத்தில் சென்ற முறை காங்கிரஸ் கூட்டணி மத்தியில் ஆட்சி அமைக்க பெருமளவில் உதவிய ஆந்திராவில் இப்போது பாஜக அலை வீசுகிறது. ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியும் கூட, தேர்தலுக்குப் பிறகு மோடியை ஆதரிக்க வாய்ப்புள்ளது.

என்.டி.டி.வி. தேர்தல் கருத்துக் கணிப்பு
என்.டி.டி.வி. தேர்தல் கருத்துக் கணிப்பு

பாஜக ஆண்ட மாநிலமான கர்நாடகத்தில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா தனது கர்நாடக ஜனதா பக்ஷா கட்சியை பாஜகவுடன் இணைத்துவிட்டார். பி.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி நிறுவனர் ஸ்ரீராமுலுவும் பாஜகவை ஆதரிப்பதாக அறிவித்துவிட்டார். பிரிந்துசென்ற பாஜகவின் தலைவர்கள் பலரும் தாய்க் கட்சியில் சங்கமிப்பதன் விளைவாக பாஜகவின் வலு அதிகரித்துள்ளது. இது வரும் தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும்.

தமிழகத்தில் மதிமுக, பாமக, தேமுதிக, இந்திய ஜனநாயகக் கட்சி, புதிய நீதிக் கட்சி, தேசிய முஸ்லிம் முன்னேற்றக் கழகம், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவை பாஜகவுடன் தேர்தல் கூட்டணி கண்டுள்ளன. பாண்டிசேரியில், மாநில முதல்வர் ரங்கசாமியின் அகில இந்திய என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தே..கூட்டணியில் அங்கமாகிவிட்டது. தமிழகத்தில் மேலும் பார்வர்டு பிளாக் (வல்லரசு), புதிய மார்க்சிஸ்ட் கட்சி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட பல சிறிய கட்சிகள் பாஜகவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளன.

கேரளத்திலும் கூட, கேரள புலைய மகா சபா பாஜகவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளது. நாராயணகுருவின் வழிவந்த எஸ்.என்.டி.பி. இம்முறை தனது அரசியல் சாரா நிலைப்பாட்டை (காங்கிரஸ் சார்பு) மாற்றிக்கொள்ளும் என்றும் தெரியவருகிறது. எல்லாம் மோடி செய்யும் மாயம்.
ஹரியானாவில் பஜன்லாலின் ஹரியானா ஜன்ஹித் காங்கிரஸ் கட்சியும் தே..கூட்டணியில் உள்ளது. தவிர, சௌதாலாவின் இந்திய தேசிய லோக்தளம் கட்சி பாஜகவின் நட்புக் கட்சியாக உள்ளது. பஞ்சாபில் நெடுநாள் கூட்டாளியான சீக்கிய மக்களின் ஆதரவு பெற்ற சிரோமணி அகாலிதளம் பாஜகவின் நமபகமான துணைவனாக உள்ளது.

வடகிழக்கு மாநிலங்களிலும் இம்முறை மோடி சூறாவளி பலனைத் தரத் துவங்கியுள்ளது. மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சி பாஜகவின் கூட்டணிக் கட்சியாக இருக்கிறது. தவிர பி..சங்மா (தேசியவாத காங்கிரஸ்) தேர்தலுக்குப் பிந்தைய நட்புக் கட்சியாக மாறவும் வாய்ப்புள்ளது.
நாகலாந்தில் நாகா மக்கள் தேசிய முன்னணி தே..கூட்டணியில் சேர்ந்துவிட்டது. மேற்கு வங்கத்தில் கூர்க்கா மக்கள் விடுதலை முன்னணி பாஜகவை ஆதரிப்பதாக அறிவித்துள்ளது. அருணாசல பிரதேசத்தில் முன்னாள் முதல்வர் கெகாங் அபாங் காங்கிரசிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்திருப்பது நல்ல அறிகுறி. மணிப்பூர், மிசோரம், திரிபுரா மாநிலங்களிலும் பழங்குடியினரின் கட்சிகள் சில பாஜக பக்கம் சாய்கின்றன.

அஸ்ஸாமில் அஸாம் கணபரிஷத் தலைவர்கள் பலர் கூண்டோடு பாஜகவில் சேர்ந்து வருகிறார்கள். அங்கு இப்போது காங்கிரஸ் கட்சிக்கு மாற்றாக பாஜக உருவெடுத்துள்ளது. அஸ்ஸாம் கணபரிஷத் கட்சியும் தே..கூட்டணியில் சேர பேச்சு நடத்துகிறது.

அயோத்தி நாயகனின் மறுபிரவேசம்
அயோத்தி நாயகனின் மறுபிரவேசம்

உத்தரப் பிரதேசத்தில் முன்னாள் முதல்வர் கல்யாண் சிங் பாஜகவுடனான ஊடல் தீர்ந்து, தனது ஜனகிராந்தி கட்சியைக் கலைத்துவிட்டு தாய்க் கட்சியில் சங்கமித்துவிட்டார். மேலும் பல சிறிய கட்சிகள் உ.பி.யில் தே..கூட்டணியில் சேர்ந்துள்ளன. குஜராத்தில் மோடியின் முன்னாள் சகாக்களும் அதிருப்தியால் பிரிந்து போனவர்களுமான கேசுபாய் பட்டேல், கோர்தன் ஜடாபியா ஆகியோர் தனிக் கட்சிகளை கலைத்துவிட்டு தாய்க் கட்சியில் இணைந்துவிட்டார்கள். பாஜக தனது பலவீனங்களை உணர்ந்து சரிசெய்துகொண்டிருப்பது அக்கட்சியின் வெற்றிவாய்ப்புகளை பல மடங்காக்கி உள்ளது.

உத்தரகண்ட், ஜார்க்கண்ட் மாநிலங்களிலும் பாஜகவின் நட்புக் கட்சிகள் கூடியுள்ளன. ஒடிசாவில் ஆளும் நவீன் பட்நாயக்கிற்கு எதிராக புதிய கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் பாஜக தீவிரமாக ஈடுபட்டுள்ளது. தில்லியில் அகில பாரதீய பாசி சமாஜ் பாஜகவில் ஐக்கியமாகி உள்ளது. ஜம்மு காஷ்மீரில் லடாக் மக்கள் கட்சியும் காஷ்மீர பாந்தர் கட்சியும் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணித் தோழர்களாக மாறும் வாய்ப்புள்ளது

இவ்வாறாக, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, அருணாசலம் முதல் குஜராத் வரை தே..கூட்டணி வலிமை பெற்று வருகிறது. நாடு முழுவதிலும் எங்கு பார்த்தாலும் மோடி அலை வீசுவது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. பாஜகவின் எதிரிக் கட்சிகளிலிருந்து விலகி விபீஷண சரணாகதி அடையும் தலைவர்களின் பட்டியலும் நீண்டுவருகிறது. பீகாரில் லாலுவின் வலக்கரமான ராம்கிருபால் யாதவும், அஸ்ஸாமில் பிரபுல்லகுமார் மொகந்தாவின் வலக்கரமான ஹிதேந்திர கோஸ்வாமியும் சில உதாரணங்கள். தமிழகத்தில் திமுக தலைவரின் மகன் மு.க.அழகிரி வெளிப்படையாக மோடியை ஆதரிப்பதாக அறிவித்துவிட்டார்.


நாட்டிற்கு நல்லகாலம் பிறந்துவிட்டது. அதன்விளைவாகவே, பாஜகவின் வலுவை அதிகரிக்கும் நிகழ்வுகள் தொடர்கின்றன. இதற்கு மோடி அலையும் முக்கிய காரணமாகியுள்ளது. 1998- 2004–இல் அடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் 23 கட்சிகள் அங்கம் வகித்தன. 2014-இல் அந்த எண்ணிக்கை இருமடங்காகும் நிலைமை காணப்படுகிறது.

எங்கும் வீசும் காவி அலை!
எங்கும் வீசும் காவி அலை!

மறுபுறமோ, காங்கிரஸ் தனது தோழமைக் கட்சிகளை இழப்பதுடன், அக்கட்சியின் முன்னணித் தலைவர்கள் தேர்தலில் போட்டியிட மறுத்து ஓட்டமெடுக்கும் நிலையைக் காண முடிகிறது. இடதுசாரிகளின் பாஜக எதிர்ப்பரசியல் செல்லாக்காசாகி வருவதையும், மூன்றாவது அணி தேர்தலுக்கு முன்னரே காணாமல் போகும் நிலையையும் அவதானிக்க முடிகிறது. தேர்தல் நாள் நெருங்கும்போது இன்னமும் பல அரசியல் அதிசயங்களை நாடு காணும் என எதிர்பார்க்கலாம்


-----------------
விஜயபாரதம்

காண்க: தமிழ் ஹிந்து

 

புதன், மார்ச் 12, 2014

தமிழகத்தில் அமைந்தது மாற்று அணி!


எண்ணியிருந்தது ஈடேறுகிறது!

தமிழகத்தில் இரு திராவிடக் கட்சிகளுக்கும் மாற்றாக பாஜக தலைமையில் புதிய மாற்று அணி உருவாக வேண்டும் என்று கடந்த செப்டம்பர் மாதமே எழுதி இருந்தேன். அநேகமாக, இந்தக் கண்ணோட்டம் அப்போது புதிய சிந்தனையாகவே இருந்தது.


பாஜகவின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படும் நரேந்திர மோடிக்கு மக்களிடம் பெருகிவரும் செல்வாக்கைப் பயன்படுத்தி தமிழ்கத்தில் தேமுதிக,  மதிமுக, பாமக கட்சிகளை ஒருங்கிணைத்து பாஜக தனி அணி அமைக்க வேண்டும் என்று நாம் வலியுறுத்தினோம்.


இன்று நாம் எதிர்பார்த்த கூட்டணி அற்புதமாக அமைந்துவிட்டது. சில தொகுதிப் பங்கீட்டுச் சிக்கல்கள் இருந்தபோதிலும், வெற்றிவாய்ப்பு, நாட்டின் எதிர்காலத் தலைமை, தமிழக அரசியலின் திசைமாற்றம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இப்போது மாற்று அணி அமைந்துவிட்டது. இத்ற்கு பாடுபட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

தமிழ்ஹிந்து இணையதளத்தின் அரசியல் பார்வையை வாசகர்கள் அறிவர். நாடு நலம் பெற நரேந்திர மோடி தலைமையில் புதிய அரசு அமைய வேண்டும். தமிழகத்தில் அமைந்துள்ள இந்தப் புதிய கூட்டணியை அதற்கான அச்சாரமாகவே காண்கிறோம். நாடு நல்ல தலைமையைப் பெற எல்லாம் வல்ல இறைவன் அருளட்டும்!
இந்தக் கட்டுரை முந்தைய இரு கட்டுரைகளின் தொடர்ச்சியே.

***

.

மும்முனைப் போட்டியில் தமிழக தேர்தல் களம்

நாட்டின் 16-வது லோக்சபா தேர்தல் ஏப்ரல் 7-இல் துவங்கி மே 12-இல் முடியும் என்று அறிவிக்கப்பட்டுவிட்டது. 9 கட்டங்களாக நடைபெற உள்ள இத்தேர்தலின் முடிவுகள் மே 16-இல் வெளியாகிவிடும். நாடு முழுவதும் தேர்தல் பரபரப்பு தொற்றத் துவங்கிவிட்டது.

தமிழகம் (39 தொகுதிகள்) மற்றும் பாண்டிச்சேரியில் (ஒரு தொகுதி) 6-வது கட்டமாக, ஒரே நாளில் ஏப்ரல் 24-இல் லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. வழக்கம்போல ‘நாற்பதும் நமதே’ என்ற முழக்கத்துடன் தமிழக அரசியல் கட்சிகள் களம் இறங்கிவிட்டன. ஆனால், இதுவரை நடைபெற்ற எந்தத் தேர்தலிலும் காணாத வேறுபாட்டை இத்தேர்தலில் காண முடிகிறது. இந்த மாற்றத்தை நிகழ்த்திக் காட்டியுள்ளது தமிழக பாஜக.

தமிழக தேர்தல் களம் இதுவரையிலும் திமுக- அதிமுக ஆகிய இரு கட்சிகளின் துருவச் சேர்க்கை கூட்டணிகளிடையிலான மோதலாகவே இருந்துவந்துள்ளது. சட்டசபைத் தேர்தல்களில் இவ்விரு கட்சிகளும் மாறி மாறி வெற்றி பெற்று, தமிழகத்தை ஆண்டு வருகின்றன. லோக்சபா தேர்தலிலும் கூட, இவ்விரு கட்சிகளின் தலைமையிலான கூட்டணிகளே தேர்தல் முடிவுகளைத் தீர்மானித்துவந்தன. இந்த யதேச்சதிகார நடைமுறைக்கு இந்த்த் தடவை முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
தமிழக தேர்தல் களம் இம்முறை அதிமுக அணி, திமுக அணி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, தனித்து விடப்பட்ட காங்கிரஸ் (ஐக்கிய முற்போக்கு கூட்டணி?), இடதுசாரிகள் அணி ஆகியவற்றுக்கு இடையிலான போட்டிக்களமாகவே இருக்கப் போகிறது. இந்தக் களத்தில் வெல்லும் வாய்ப்பு யாருக்கு?

வெற்றி- தோல்விகள் துல்லியமாகக் கணிக்க முடியாதவை. இனிவரும் நாட்களில் நடைபெறும் பிரசாரமும் நிகழ்வுகளுமே தேர்தலின் பாதையைத் தீர்மானிக்கும். எனினும், அரசியல் கட்சிகளின் ஆயத்தப் பணிகள் அவற்றின் விளைவுகளை ஓரளவு சுட்டிக்காட்ட வல்லவை.

அந்தவகையில், தமிழக அரசியல் கட்சிகளின் தேர்தல் ஆயத்தப் பணிகள், கூட்டணி முன்னேற்பாடுகள், தொகுதிப் பங்கீடுகள், வேட்பாளர் தேர்வுகள், தேர்தல் அறிக்கைகள், தலைவர்களின் பிரசாரம் ஆகியவை புதிய தேர்தல் முடிவுகளை வழங்கக் காரணமாகும். இப்போதைக்கு, தமிழக அரசியல் கட்சிகளின் தேர்தல் ஆயத்தப் பணிகளை ஒரு பருந்துப் பார்வையில் காணலாம்….
.
கனவுலகில் அதிமுக அணி:
ஆசை இருக்கிறது பிரதமராக....
ஆசை இருக்கிறது பிரதமராக…
.
தமிழகத்தில் ஆளும்கட்சியாக உள்ள அதிமுக, அதிகாரப்பூரவமான தேர்தல் பணிகளைத் துவக்கியதில் முந்திக்கொண்டது. இடதுசாரிக் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி என்று அறிவித்து, தமிழகம் முழுவதும் மார்ச் 3 முதல் வலம்வரத் துவங்கிவிட்டார், அதிமுக தலைவியும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா. முன்னதாக தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் போட்டியிடும் 40 அதிமுக வேட்பாளர்களின் பட்டியலையும் அவர் அறிவித்துவிட்டார்.
இந்த அறிவிப்பால் நிலைகுலைந்துபோன இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் மார்க்சிஸ்டு கட்சியும் அதிமுக தலைமையிடம் மன்றாடிப் பார்த்தன. இவ்விரு கட்சிகளுக்கும் தலா ஒரு தொகுதி மட்டுமே கொடுக்க முடியும் என்ற ஜெயலலிதாவின் நிலைப்பாடு இடதுசாரி கட்சிகளுக்கு ஏற்படுத்திய நெருக்கடியால், அவை வேறுவழியின்றி மார்ச் 6-இல் அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தன.

இப்போதைக்கு தனியரசின் கொங்கு இளைஞர் பேரவை, சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, செ.கு.தமிழரசனின் இந்திய குடியரசு கட்சி, சேதுராமனின் அகில இந்திய மூவேந்தர் முன்னேற்றக் கழகம், மற்றும் சில உதிரிக் கட்சிகளே உள்ளன. இவை பெயரளவில் மட்டுமே கூட்டணியில் உள்ளன. இக்கட்சிகளுக்கு வேட்பாளர் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

சென்ற சட்டசபைத் தேர்தலில் அதிமுக அணி மிகவும் பலம் பொருந்தியதாக இருந்தது. தேமுதிக, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்டு கட்சி, புதிய தமிழகம், ஃபார்வர்ட் பிளாக், கொங்கு இளைஞர் பேரவை, சமத்துவ மக்கள் கட்சி, இந்திய குடியரசு கட்சி, அகில இந்திய மூவேந்தர் முன்னேற்றக் கழகம், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகளின் ஒருங்கிணைப்பால் அதிமுக அபார வெற்றி பெற்றது.

இம்முறை அதிமுக-வின் பாராமுகம் காரணமாக, புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை கூட்டணியிலிருந்து வெளியேறி திமுக கூட்டணியில் அங்கமாகிவிட்டன. தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட சிக்கலால், இரு இடதுசாரி கட்சிகளும் இப்போது அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறி உள்ளன. தேமுதிக-வோ, நீண்ட யோசனைக்குப் பிறகு, பாஜக கூட்டணியில் இடம் பெற முடிவு செய்துவிட்ட்து. ஆக, அதிமுக அணி தற்போது கூட்டணி என்ற முறையில் பலம் குறைந்தே காணப்படுகிறது.

எனினும், எதைப் பற்றியும் கவலைப்படாமல், தமிழகம் முழுவதும் பிரசாரப் பயணத்தைத் துவக்கிவிட்டார் ஜெயலலிதா. இலவசப் பொருள்களையும் ‘விலையில்லா’ திட்டங்களையும் வாரி வழங்கியதாலும், அம்மா உணவகம், அம்மா குடிநீர் போன்ற நலத் திட்டங்களாலும் மக்களிடையே தனக்கு சாதகமான அலை வீசுவதாக நம்பி, தேசிய அளவிலான தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, பிரசாரம் செய்துவருகிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.

தமிழக தேர்தல் களத்தில் முன்னிலையில் இருப்பது ‘அம்மா’ தான். இதை மறுக்க முடியாது. ஆனால், நாற்பதிலும் அவர் ஜெயம் காண முடியாது என்பதை தேர்தல் முடிவுகளில் காணத் தான் போகிறார். அவரை, சொந்தக் கட்சியினர் சீவிவிட்ட பிரதமர் பதவி ஆசை என்ற கொம்பு படாத பாடுபடுத்துகிறது. ஆசை யாருக்குத் தான் இல்லை? அதுதானே அனைத்துத் துன்பங்களுக்கும் காரணம் என்கிறார் புத்தர்?
.
எழ முயலும் திமுக அணி:

தோல்வியிலிருந்து மீண்டால் போதும்...
தோல்வியிலிருந்து மீண்டால் போதும்…

கடந்த 2011 சட்டசபை தேர்தலில் கடும் தோல்வியுற்று, எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வசமான பிறகு, பரிதாப நிலையில் இருந்தது திமுக. இப்போது அக்கட்சிக்கு தன்னை மீட்டுருவாக்கிக்கொள்ளக் கிடைத்த வாய்ப்பாக லோக்சபா தேர்தல் வந்திருக்கிறது. அதன் முதுபெரும் தலைவர் கருணாநிதி, ஆரம்பத்திலேயே காங்கிரஸ் கட்சியைக் கழற்றிவிடுவது என்பதில் தெளிவாகிவிட்டார். தவிர புதிய கட்சிகளை தனது அணியில் சேர்ப்பதன் அவசியத்தையும் உணர்ந்துவிட்டார்.

தமிழகத்தில் நிலவும் தீவிரத் தமிழ் உணவாளர்களின் ஈழ அரசியல், இலங்கை அரசால் கைது செய்யப்படும் தமிழக மீனவர்களின் பிரச்னை, காவிரி, முல்லைப் பெரியாறு விவகாரம், ராஜீவ் கொலையாளிகளின் தண்டனை ரத்து விவகாரம் போன்றவற்றில் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு திமுகவுக்கு பெரும் சேதாரத்தை ஏற்படுத்திவிட்டது. இனியும் அக்கட்சியுடன் தோழமை கொண்டிருந்தால் தமிழகத்தில் மீடேற முடியாது என்பது அரசியல் சாணக்கியரான கருணாநிதிக்குத் தெரியாமல் இருந்தால் தான் ஆச்சரியம்.

ஆயினும் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் வசமாக சிக்கியுள்ள திமுக, காங்கிரஸ் கட்சியின் ஏவல் நாயான மத்திய புலனாய்வு அமைப்புக்கு (சிபிஐ) அஞ்சி இத்தனைநாளும் அமைதி காத்தது. கொண்டவளும் பெற்றவளும் கராக்கிரஹம் ஏகக் காரணமாகிவிடக் கூடாது என்ற அதீத எச்சரிக்கை உணர்வுடன், காங்கிரஸுக்கு போக்குக் காட்டி, கடைசியில் அதற்கு ‘பெப்பே’ காட்டியிருக்கிறார் கலகார்.

இக்கூட்டணியில் இருந்த பாமக, ஏற்கனவே பிரிந்துசென்று சமுதாயக் கூட்டமைப்பை உருவாக்கி தனி அணியாக ஆவர்த்தனம் செய்து, இப்போது பாஜக அணியில் சங்கமித்துவிட்டது. மற்றொரு கூட்டணிக் கட்சியான கொமுக சிதறி, அதன் ஓர் அங்கமான கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி (ஈஸ்வரன் தலைமையிலானது) பாஜக கூட்டணியில் சேர்ந்துவிட்டது.

ஸ்ரீதர் வாண்டையாரின் மூவேந்தர் முன்னேற்றக் கழகம், தனபாலனின் பெருந்தலைவர் மக்கள் கட்சி, முஸ்லிம் லீக் ஆகியவை அக்கூட்டணியில் தொடர்கின்றன. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், கருணாநிதியின் அணுக்கத் தோழராக இருந்தபோதும், அக்கட்சிக்கு ஒரே தொகுதி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டதால் ஏற்பட்ட அதிருப்தி இப்போது புகைந்து அடங்கியது. அவருக்கு மேலும் ஒரு தனித்தொகுதியை தாரைவார்த்து புகைச்சலை அடக்கினார் கருணாநிதி.
இந்நிலையில், கருணாநிதி, அவரது புதல்வர் ஸ்டாலின் ஆகியோரின் முயற்சியால், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய தேசிய லீக், கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் ஆகியவையும் திமுக கூட்டணிக்கு இடம் பெயர்ந்துள்ளன. இக்கட்சிகளுக்கு தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுவிட்டன.

கிடைக்கும் எந்த வாய்ப்பையும் இழக்க விரும்பாமல், அதிமுக-வால் அவமதிக்கப்பட்ட இரு கம்யூனிஸ்டு கட்சிகளுக்கும் எந்த மனக் கிலேசமும் இன்றி வரவேற்பிதழ் வாசித்தார் கருணாநிதி. ஆனால், கம்யூனிஸ்டுகள் திமுக அணியில் சேர்ந்தால் 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு பதில் சொல்ல வேண்டியிருக்குமே என்பதால் தயங்கினார்கள். தவிர இத்தனை நாட்கள் அதிமுக அணியில் இருந்துவிட்டு திடீரென திமுக அணிக்கு மாறினால் கட்சிக்கு அவப்பெயர் ஏற்படும் என்றும் அஞ்சினார்கள். இரண்டு நாட்கள் பொறுத்துப் பார்த்த கருணாநிதி இப்போது திமுக போட்டியிடும் 35 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள அறிவித்திருக்கிறார்.

மொத்தத்தில், சட்டசபைத் தேர்தலில் இழந்த கௌரவத்தை மீட்க தனது கூட்டணியை வலுப்படுத்திக் கொண்டிருக்கிறது திமுக. ஆனால், புதிய வரவான மோடி அலையில் பயணிக்கும் பாஜக கூட்டணிக்கு அடுத்த இடமே தமிழகத்தில் திமுக கூட்டணிக்குக் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்பது பரவலான கருத்தாக உள்ளது.

எனினும், இம்முறை புத்திசாலித்தனமாக ஒரு பெரும் சுமையை (காங்கிரஸ்) கழற்றிவிட்ட திருப்தியுடன், தேர்தலுக்குப் பிந்தைய புதிய கூட்டாளிகளைக் கவரத் தேவையான இடங்களில் வெல்லும் துடிப்புடன் திமுக கூட்டணி களம் இறங்கிவிட்டது.
.
நம்பிக்கையூட்டும் பாஜக அணி:

மோடி அலையில் அமைகிறது  மாற்று அணி!
மோடி அலையில் அமைகிறது மாற்று அணி!

எப்போதும் திமுக அல்லது அதிமுக கட்சிகளையும், அக்கட்சிகளின் முதுகில் சவாரி செய்யும் கூட்டணிக் கட்சிகளையுமே பார்த்துவந்த தமிழக வாக்காளப் பெருமக்களுக்கு இம்முறை வித்யாசமான காட்சி தென்படுகிறது. ஒருகாலத்தில் இவ்விரு கட்சிகளின் முதுகில் காங்கிரஸ் போலவே சவாரி செய்த கட்சி தான் பாஜக-வும். ஆனால், மாறியுள்ள தேசிய அரசியல் சூழலில் பாஜக-வின் பெறுமதிப்பும் ஆளுமையும் தமிழகத்திலும் கூட அதிகரித்துள்ளது. அதன் விளைவே, பாஜக தலைமையில் அமைந்துள்ள புதிய கூட்டணி.

சொல்லப்போனால், இக்கூட்டணிக்காக கடந்த 4 மாதங்களாக தமிழக பாஜக தீவிர முயற்சிகளை மேற்கொண்டுவந்தது. ஆரம்பத்தில் அதிமுக-வுடன் கூட்டணி சேர பாஜக மத்திய தலைமை முயன்றபோதும், ஜெயலலிதா தானே பிரதமராவது என்று தீர்மானித்துவிட்டதால், பாஜக தப்பிப் பிழைத்தது!

அப்போதுதான், இரு திராவிடக் கட்சிகளுக்கும் எதிராக வலிமையான ஒரு கூட்டணியை உருவாக்குவது என்று பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் திட்டமிட்டார். திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளாலும் பாதிக்கப்பட்ட, புறக்கணிக்கப்பட்ட கட்சிகள் கைகோர்த்தால் மாற்றம் நிகழும் என்பதை அவர் கண்டுகொண்டார். அதற்கான முயற்சிகள் அதிகாரப்பூர்வமற்ற முறைகளில் தொடர்ந்து நிகழ்ந்தன.

இதில் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியனின் பணி பேரிடம் வகித்தது. அவரது தீவிர முயற்சியாலும், நாடு நெடுகிலும் உருவாகிவரும் மோடி அலையின் அனுபவத்தாலும், தமிழக பாஜக தலைவர்களின் நாகரிகமான செயல்பாடுகளாலும், தொடர்ந்த விடாமுயற்சியாலும் புதிய கூட்டணித் தோழர்கள் பாஜக-வுக்குக் கிடைத்திருக்கிறார்கள்.

திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளாலும் பந்தாடப்பட்ட வைகோ தலைமையிலான மதிமுக, இயற்கையாகவே பாஜக-வின் நலம்விரும்பியாக அமைந்தது. அக்கட்சியின் வருகை பாஜக-வுக்குத் தெம்பூட்டியது. அடுத்து, பச்சமுத்துவின் இந்திய ஜனநாயக கட்சி, ஈஸ்வரனின் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ஏ.சி.சண்முகத்தின் புதியநீதி கட்சி, தேசிய முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (மதச்சார்பின்மை முத்திரை பிற கூட்டணிகளுக்கு மட்டும் ஏகபோக உரிமையா என்ன?) ஆகியவை தே.ஜ.கூட்டணியில் இணைந்தன.

இருப்பினும், வாக்குகள் சிதறுவதைத் தடுக்க, தேமுதிக-வும் பாமக-வும் இக்கூட்டணியில் இடம் பெற வேண்டும் என்று தீவிர முயற்சிகள் நடந்தன. இவ்விரு கட்சிகளும் தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட சிக்கலால் தங்கள் முடிவைத் தெரிவிக்க தாமதித்தன. இதனிடையே, விஜயகாந்த் காங்கிரஸ் பக்கமும் திமுக பக்கமும் ஊசலாடிவிட்டு, இறுதியில் பாஜக பக்கம் திரும்பினார். பாமக-வும் தேர்தல் தேதி அறிவித்தவுடன் சுதாரித்துக்கொண்டு தே.ஜ.கூட்டணியில் சங்கமிக்கத் தயார் என்று அறிவித்தது. எனினும், இக்கட்சிகளை கூட்டணியில் சேர்க்க, பல தியாகங்களை பாஜக செய்தாக வேண்டிய நிலை ஏற்பட்டது. குறிப்பாக, பாஜக தான் போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கையைக் குறைத்துக் கொள்ள நேரிட்டுள்ளது.

தேர்தல் கூட்டணி என்பதே ஒன்றைக் கொடுத்து ஒன்றைப் பெறுவது தான். ஒத்த சிந்தனையுடன், விட்டுக் கொடுத்து, அணியாக அமைந்து பணிபுரிவதன் மூலமாக அணியில் உள்ள அனைவருக்குமே நலம் விளையும் என்பதே கூட்டணியின் மகத்துவம். அதற்கு சிறந்த முன்னுதாரணமாக மதிமுக தலைவர் வைகோ செயல்பட்டது பாராட்டுக்குரியது. தேமுதிக-வும் பாமக-வும் கூட நிதர்சனத்தை உணர்ந்து சிலவற்றில் விட்டுக் கொடுத்து, தமிழகத்தில் தே.ஜ.கூட்டணியை உருவாக்கி உள்ளன. பாஜக-வின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி என்ற அரசியல் பேருரு இதற்கு அடிப்படையாக அமைந்துள்ளதையும் மறுக்க முடியாது.

2014 பாஜக-வின் ஆண்டு. நாடு முழுவதிலுமே, பாஜக-வை நாடி புதிய கூட்டணித் தோழர்கள் வந்துகொண்டுள்ளனர். ராம்விலாஸ் பஸ்வானின் லோக்ஜனசக்தி, ராம்தாஸ் அதவாலேயின் இந்திய குடியரசு கட்சி போன்ற சமூக முக்கியத்துவம் வாய்ந்த கட்சிகளின் இணைப்பால் தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுப்பெற்று வருகிறது. தவிர, பாஜக-விலிருது விலகி தனிக்கட்சி துவங்கிய கல்யாண்சிங், எடியூரப்பா, ஸ்ரீராமுலு, கேசுபாய் படேல், கோர்தன் ஜடாஃபியா போன்ற தலைவர்களும் தாய்க்கட்சியில் சேர்ந்துள்ளனர். தலித் தலைவர் உதித்ராஜ், முன்னாள் ராணுவ தளபதி வி.கே.சிங், இசை அமைப்பாளர் பப்பி லஹரி போன்றவர்களின் வரவால் பாஜக புத்தெழுச்சி பெற்றுள்ளது. மாற்றுக் கட்சிகளிலிருந்து பாஜகவில் சேரும் என்.டி.ஆரின் மகள் புரந்தரேஸ்வரி, காஷ்மீரத் தலைவர் இஸ்தியாக் வானி போன்ற பிரமுகர்களின் எண்ணிகையும் அதிகரித்துள்ளது.

இவ்வாறாக, நாடு முழுவதிலுமே மோடி அலையும் பாஜக ஆதரவு நிலையும் பரவி வருகின்றன. இந்நிலையில் தமிழகம் மட்டும் அதிலிருந்து விதிவிலக்காக இருக்க முடியாது என்பதையே, இங்கு உருவாகியுள்ள புதிய கூட்டணி காட்டுகிறது.

திமுக- கடந்த 17 ஆண்டுகளாக மத்தியில் அதிகாரத்தை சுவைத்த கட்சி. இருப்பினும் அக்கட்சியால் தமிழக உரிமைகள் காக்கப்படவில்லை என்பதை தமிழக மக்கள் உணர்ந்துள்ளனர். அதிமுக அரசின் மக்கள்நலத் திட்டங்கள் பல இருப்பினும், மாநிலத்தின் அடிப்படைக் கட்டமைப்பை வலுப்படுத்துவதில் அக்கட்சி தோல்வியுற்றிருப்பதை மறுக்க முடியாது. தவிர, அதிமுக வெல்வதால் தேசிய அளவில் எந்தப் பயனும் இல்லை என்பதை விஷயஞானம் உள்ள அனைவருமே அறிந்துள்ளனர். இத்தகைய சூழலில் பாஜக உருவாக்கியுள்ள புதிய அணி பல சாகசங்களை நிகழ்த்திக் காட்டும் வல்லமையுடன், நம்பிக்கை அளிப்பதாக அமைந்துள்ளது.
.
நான்காவது இடத்தில் மூன்றாவது அணி:

வெற்றுக் காகிதமாகிவிட்ட  இடதுசாரிகளின் கனவு...
வெற்றுக் காகிதமாகிவிட்ட இடதுசாரிகளின் கனவு…

தேசிய அளவில் காங்கிரஸ், பாஜகவுக்கு மாற்றாக இடதுசாரிகள் ஏற்பாடு செய்த மாற்று அரசியல் அணி என்று நாமகரணம் சூட்டப்பட்ட மூன்றாவது அணி தமிழகத்தில் முளையிலேயே கருகிவிட்டது. அதிமுக தலைவி பாஜக பக்கம் சாயாமல் இருப்பதற்காக மிகவும் அவசரமாக அக்கட்சியுடன் கூட்டணி அமைத்த இடதுசாரிகள், இப்போது நிர்கதியாகத் தவிக்கிறார்கள். தேசிய அளவிலான முன்றாவதுஅணி துவங்கி ஒரு மாத்திற்குள் பிளவுபடும் நிலை ஏற்பட்டுள்ளது. திரிணாமூல் காங்கிரஸ் தலைவி மம்தா பானர்ஜியுடன் ஜெயலலிதா நெருக்கம் காட்டுவது பிரகாஷ் காரத்திற்கு எரிச்சல் ஊட்டியிருக்கிறது.

எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமலே இதுவரை திமுக முதுகில் சவாரி செய்துவந்த காங்கிரஸ், இப்போது யாரும் சீண்டுவதற்கு லாயக்கற்ற கட்சியாக தனித்துவிடப்பட்டுள்ளது. தேர்தலில் எந்த ஒரு தொகுதியிலும் முன்வைப்புத்தொகையைப் பெறும் வாய்ப்பு கூட இல்லாமல் போகும் நிலை, மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டிருக்கிறது.

நாடு முழுவதும் 300 இடங்களில் போட்டியிடப் போவதாகக் கூறும் ஆம் ஆத்மி கட்சி தமிழகத்தில் இருக்கும் இடமே தெரியவில்லை. கூடங்குளம் அணுஉலை எதிர்ப்புப் போராட்டக்காரர்கள் இக்கட்சியில் இணைந்திருப்பது மட்டுமே குறிப்பிடத் தக்க செய்தி. உதயகுமார், புஷ்பராயன் போன்றவர்களின் வரவால், ஆம் ஆத்மி கட்சியின் அரசியல் நிலைப்பாடு தெளிவாக்கப்பட்டுள்ளதும் நல்லதே. இவையல்லாத சிறு கட்சிகளின் இருப்பால் எந்த விளைவும் தமிழக தேர்தல் களத்தில் ஏற்பட வாய்ப்பில்லை.

இதுவரையிலும், அரசியல் களத்தில் தீண்டத் தகாத கட்சியாக இருந்த பாஜக, இம்முறை, இரு பிரதான அரசியல் கட்சிகளுக்கும் சவால் விடும் வகையில் புதிய அணியை ஏற்படுத்தி இருக்கிறது. மாறாக, இதுவரை பாஜக-வை ஏளனம் செய்துவந்த காங்கிரஸும் இடதுசாரிகளும் பரிதவிக்கும் நிலையில் இருக்கிறார்கள்.

மொத்தத்தில் தமிழக அரசியல் களம் இப்போது தெளிவடைதிருக்கிறது. சுமைக் கட்சிகள் விக்கித்து நிற்க, உண்மையான மக்கள் ஆதரவுள்ள கட்சிகள் மூன்று அணிகளாகப் பிரிந்து நிற்கின்றனர். இது தேர்தலுக்கு முந்தைய நிலை மட்டுமே. தேர்தலுக்குப் பிந்தைய நிலையில், தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் எவர் வென்றாலும், அவர்கள் மோடிக்குப் பின் அணிவகுக்கவே வாய்ப்புள்ளது என்பதையும் சொல்லியாக வேண்டும்.
எனவே தான்,  ‘மோடி எனது நண்பர்’ என்று இப்போதே கூறிவைக்கிறார் திமுக தலைவர் கருணாநிதி. மோடியின் நண்பராக அனைவராலும் அறியப்பட்ட ஜெயலலிதா தனது பிரசாரத்தில் எங்குமே பாஜக-வை மறந்தும்கூட வசைபாடுவதில்லை. அதேபோல, மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்களும் கூட பிரசாரத்தில் காங்கிரஸை மட்டுமே விமர்சிக்கின்றனர்.

பாஜக அணியில் உள்ள தேமுதிக, பாமக, மதிமுக ஆகியவை இரு திராவிடக் கட்சிகளையும் எதிர்த்து அரசியல் நடத்தியாக வேண்டிய நிலையில் உள்ளன. ஆனால், பாஜக-வோ, இரு பிரதான கட்சிகளையும் நட்புறவுடன் கூடிய எதிராளிகளாகவே காண்கிறது. இத்தகைய தேர்தல் களம் தமிழகத்திற்குப் புதியது. யாரையும் வசை பாடாமல், மக்களின் ஆதரவை ஆக்கப்பூர்வமான பிரசாரத்தின் மூலமாகப் பெறுவதில் இந்தத் தேர்தல்களம் புதிய திசை காட்டுவதாக அமைந்துள்ளது. இதேநிலை தான் மகாராஷ்டிரம், ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்கம், அசாம், ஜம்மு காஷ்மீரம் போன்ற மாநிலங்களிலும் காண முடிகிறது.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கப் போனால், பாஜக-வின் செங்கோட்டையை நோக்கிய பாதை தெளிவாகச் செப்பனிடப்படுகிறது. அடுத்தடுத்த வரும் கருத்துக் கணிப்புகளும் பாஜக-வின் முன்னிலையை வெளிப்படுத்தி வருகின்றன. தமிழகத்திலும் கூட, இம்முறை பாஜக அமைத்துள்ள புதிய கூட்டணி பல அதிசயங்களை நிகழ்த்த வாய்ப்புள்ளது. ஆளும் கட்சியான அதிமுக தொகுதிகளை வெல்வதில் முதலிடத்தில் இருந்தாலும், வெற்றிவாய்ப்பில் திமுக-வைப் பின்னுக்குத் தள்ளி இரண்டாமிடம் பிடிக்கும் நிலையில் தே.ஜ.கூட்டணி உள்ளது. வரும் நாட்களில் இந்த மூன்று அணிகளுக்கு மத்தியில் மட்டுமே போட்டி நிலவும்.

-----------
விஜயபாரதம்
காண்க: தமிழ் ஹிந்து 

திங்கள், மார்ச் 03, 2014

இலக்கு 40: யாருக்கு?

 
பாஜக மடத்தில் இடம்பிடிக்க இப்போதே துண்டுபோட உதவும் படம்


நாடாளுமன்ற லோக்சபா தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்து, தேர்தல் பணியைத் துவக்கிவிட்டது அதிமுக. தேசிய அளவில் கடந்த 5 மாதங்களாக தேர்தலை முன்னிறுத்திய பிரசாரத்தில் பாஜக இருந்தாலும், வேட்பாளர் அறிவிப்பில் அதிமுக முந்திக்கொண்டுவிட்டது. இதில் அதிர்ந்து போயிருப்பவர்கள், அதிமுக-வுடன் கூட்டணி வைத்துள்ள இடதுசாரித் தோழர்கள் தான்.

பாஜக-வுடன் அதிமுக சேர்வதைத் தடுப்பதற்காக, காலில் விழாத குறையாக ஜெயலலிதாவுடன் கூட்டணிக்கு முயன்ற தோழர்களுக்கு எத்தனை இடம் என்பதை அறிவிக்காமலேயே, அனைத்துத் தொகுதிகளிலும் தனது கட்சி வேட்பாளர்களை அறிவித்திருக்கிறார் ஜெயலலிதா. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தக்கள் தகுதிக்கு மேல் -அதாவது தலா ஒரு தொகுதி- கேட்டதால் அதிருப்தி அடைந்த அதிமுக தலைவி, அவர்களை வழிக்குக் கொண்டுவரவே 40 தொகுதிகளிலும் தனது  வேட்பாளர்களை நிறுத்தி இருப்பதாகச் சொல்கிறார்கள்.

தொடர்ந்து பேச்சுவார்த்தை நடப்பதாகவும், கம்யூனிஸ்ட் கட்சிகளின் கூட்டணி உறுதியானவுடன், அக்கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் இடங்களில் அதிமுக வேட்பாளர்கள் விலகிக் கொள்வார்கள் என்றும் ஜெயலலிதா கூறியிருப்பினும், தேசிய கட்சிகளான் கம்யூனிஸ்ட் கட்சிகள், கோபத்தை வெளிப்படுத்த முடியாமல் மென்று விழுங்குகின்றன.

நாடு முழுவதும் தேசியக் கட்சியாகத் திகழ வேண்டுமானால், பல மாநிலங்களில் தேர்தலில் வென்றாக வேண்டும். போன தேர்தலிலேயே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய அந்தஸ்து கேள்விக்குறியாகிவிட்ட்து. எனவே, இம்முறை எப்பாடுபட்டாவது தனது அந்தஸ்தைத் தக்கவைத்துக் கொண்டாக வேண்டிய நிலையில் உள்ள இடதுசாரிக் கட்சிகளுக்கு ஜெயலலிதாவைச் சரணடைவதைத் தவிர வேறுவழியில்லை.

அதிமுக-வின் கொள்கைப் பரப்பு செயலாளராகவே மாறிவிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா. பாண்டியன்,  “எங்களுக்கு எந்தத் தொகுதியும் கொடுக்காவிட்டாலும் கூட, கூட்டணி தொடரும்’’ என்று கூறி இருக்கிறார். அதிமுகவை முறைக்கப்போய், அவர் தேர்தலுக்குப் பிறகு மோடியுடன் கைகோர்த்துவிட்டால் என்ன செய்வது என்ற கவலை அவருக்கு. இது புரியாமல், அவரை அவரது கட்சித் தோழர்களே கர்ணகடூரமாக முறைக்கிறார்கள்!

இந்த லட்சணத்தில் தான் 11 கட்சிகள் சேர்ந்து ‘மாற்று அணி’ என்ற பெயரில் மூன்றாவது அணி அமைத்துள்ளதாக அறிவித்திருக்கிறார்கள். நிதிஷின் ஐக்கிய ஜனதாதளம், 4 இடதுசாரி கட்சிகள், அதிமுக, முலாயமின் சமாஜ்வாதி கட்சி உள்ளிட்டவை அங்கம் வகிக்கும் இக்கூட்டணியில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியும் ம்ம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸும் இனைய முடியாது. காங்கிரஸுடன் கைகோர்க்கவுள்ள லாலுவின் ஆர்ஜேடி கட்சியும் இதில் சேராது. மொத்தத்தில் காங்கிரஸ், பாஜக-வுக்கு மாறாக முன்வைக்கப்பட்டுள்ள இக்கூட்டணி, ஆண்டிகள் கூடி மடம் கட்டிய கதை தான்.

அதிமுக-வுடன் கூட்டணிக்கு ஆரம்பத்தில் பாஜக முயன்றது. ஆனால், அங்கிருந்து சாதகமான பதில் வராததால், மாற்று ஏற்பாடுகளில் இறங்கியது. இப்போது, மதிமுக, இந்திய ஜனநாயக கட்சி, கொமுதேக, புதிய நீதி கட்சி உள்ளிட்ட சில கட்சிகளுடன் கூட்டணி அமைத்துவிட்ட்து பாஜக. விஜயகாந்தின் தேமுதிக, ராமதாஸின் பாமக- ஆகியவற்றுடனும் கூட்டணி அமைக்க தீவிர முயற்சிகள் நடந்துவருகின்றன.

அநேகமாக, இந்த இதழ் வாசகர் கையில் கிடைக்கும்போது, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி உருவாகி இருக்கும். கட்சிகளிடையே தொகுதிகளைப் பங்கிடுவதில் ஏற்படும் சிக்கலே இக்கூட்டணியின் தாமத்த்திற்குக் காரணம் என்று தெரிய வருகிறது.
தேசிய அளவிலும் கூட, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேரும் கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ராம்விலாச் பஸ்வானின் லோக்ஜனசக்தி கட்சி பாஜக-வுடன் சேர்ந்திருப்பது முக்கியமான அறிகுறி. அநேகமாக, இம்முறை தேஜகூட்டணியில் சேரும் கட்சிகளின் எண்ணிக்கை 30-ஐத் தாண்டக்கூடும். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது தேஜகூட்டணியில் 23 கட்சிகள் அங்கம் வகித்ததை இங்கு நினைவுகூரலாம்.

அதிமுகவின் பிரதான எதிரியான முன்னாள் ஆளும்கட்சியான திமுக, இம்முறை காங்கிரஸைக் கழற்றிவிடுவதில் தீர்மானமாக இருக்கிறது. இப்போதைக்கு திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம், மமக, முஸ்லிம் லீக் ஆகியவை மட்டுமே உறுதியாகி உள்ளன. காங்கிரஸ் கிட்டத்தட்ட தனிமரமாகி நிற்கிறது. மதவாதக் கட்சியென்று கூறி பாஜக-வை தீண்ட்த் தகாத கட்சியாக சித்தரித்துவந்த காங்கிரஸ் கட்சியின் நிலைமை தமிழகத்தில் உவப்பானதாக இல்லை. தமிழகத்தில் தீண்டத் தகாத கட்சி ஒன்று உண்டென்றால், அது காங்கிரஸ் தான்.

இவ்வாறு தமிழக அரசியல் களம் வேகமாக மாறி வருகிறது. தேசிய அளவில் பாஜகவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு அதிகரித்துவரும் ஆதரவு தமிழக அரசியல் கட்சிகளையும் யோசிக்கச் செய்கிறது. தேர்தல் கருத்துக் கணிப்புகளும் ஊடகக் கணிப்புகளும் பாஜக தனித்தே 240 இடங்களுக்கு மேல் வென்றுவிடும் என்று காட்டுவதால், மோடிக்கு தமிழகத்திலும் ஆதரவு பெருகி வருகிறது. தினமலருக்கு அளித்த நேர்காணலில் “மோடி எனது நண்பரும் கூட’’ என்று திமுக தலைவர் கூறியிருப்பதன் காரணம் அதுவே. இதே மோடியைக் காரணம் காட்டித் தான் அற்புதமான அரசியல் தலைவர் அடல் பிகாரி வாஜ்பாயின் முதுகில் குத்திவிட்டு காங்கிரஸ் அணிக்கு 2004-ல் தாவினார் கலாகார். இவரது புதிய அவதாரம் கண்டு, பழைய அனுபவத்தை பாஜக மறந்துவிடக் கூடாது.

நாடு முழுவதிலும் பாஜக-வுக்கு சாதகமான அலை வீசத் துவங்கிவிட்டது. இதை தமிழகத்தில் தங்களுக்கு சாதகமாக மாற்றும் பொறுப்பும் கடமையும் பாஜகவுக்கு இருக்கிறது. நாற்பதும் நமதே என்பது தான் தமிழக அரசியல் கட்சிகளின் தேர்தல் கோஷமாக இருப்பது வழக்கம். இம்முறை இந்த 40 தொகுதிகளும் யாருக்கு?

யாரும் ஆசைப்படலாம். அதற்கான வாய்ப்பும் தகுதியும் உள்ள கட்சிகள் எவை என்பது தமிழக மக்களுக்கே தெரியும். இந்த 40 தொகுதிகளில் அதிகமான தொகுதிகளை வெல்ல பாஜக-வும் தே.ஜ.கூட்டணிக் கட்சிகளும் முயன்றால் நிச்சயம் சாதகமான முடிவுகள் கிடைக்கும். அதுவே தேசிய அளவிலும் எதிரொலிக்கும்.



------------ 

விஜயபாரதம் (07.03.2014)